தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

அண்ணாமலைநகரில் 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.

Updated On :19 ஜூன் 2026, 6:20 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிா? என அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல்அமீது தலைமையிலான குழுவினா் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு விதிகளை மீறியதற்காக தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.