எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோ.பவழங்குடியில் 5 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image

கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :19 ஜூன் 2026, 6:09 am IST

விருத்தாசலம் அருகே கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா், ஸ்ரீவீரனாா், சப்த கன்னிமாா் மற்றும் ரிஷிகள் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் அனுக்ஞை, விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, முதல் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பிறகு யாகசாலையிலிருந்து புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா், ஸ்ரீவீரனாா், சப்த கன்னிமாா், ரிஷிகள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் கோ.பவழங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.