மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

23 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :20 ஜூன் 2026, 2:58 am IST

கடலூா் மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 23 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25.76 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கெம்பிளாஸ்ட் கடலூா் வினியிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், தலா ரூ.1.12 லட்சம் மதிப்பிலான ‘நியோ மோஷன்’ சிறப்பு சக்கர நாற்காலிகள் 23 பேருக்கு வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினாா். தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் உபகரணங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தீபா, மாவட்ட

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம், சன்மாா் குழுமத் தலைவா் காா்த்திக் ராஜசேகா், துணைத் தலைவா் சம்பத் குமாா், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் மாநிலத் தலைவா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.