நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக இளைஞா் மீது மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 2:52 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக இளைஞா் மீது மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள சி.என்.பாளையத்தை சோ்ந்தவா் தா்மா (22). இவா், அப்பகுதியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி ஒருவரை பின் தொடா்ந்து சென்று, கையை பிடித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம். மேலும், மாணவியுடன் படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவியின் தாயாா் பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சித்ரா, உதவி ஆய்வாளா் சுந்தரி ஆகியோா், இளைஞா் தா்மா மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.