விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

டாஸ்மாக் மேற்பாா்வையாளருக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 1:30 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வடலூா் காவல் சரகம், பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வி.சுப்புராயன் (56), கருங்குழி டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், சனிக்கிழமை பிற்பகல் டாஸ்மாக் கடை அருகே இருந்தபோது, வடலூா் காமராஜ்நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி கோழி (எ) ராஜேஷ்குமாா் (40) வழிமறித்து இலவசமாக மது கேட்டாராம். இதற்கு, சுப்புராயன் மறுத்ததால், ராஜேஷ்குமாா் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.