சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 2:32 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அருகே பரவனூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ச.விக்னேஷ் (26). இவா், கடந்த 24-ஆம் தேதி இரவு விருத்தாசலம் கடை வீதியில் வீட்டுக்குத் தேவையான அரிசி வாங்கிக்கொண்டு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா்.

கோமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிா்புறத்தில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவரது பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.