திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வெள்ளிக் கடற்கரையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்: ஆட்சியா்

கடலூா் வெள்ளிக் கடற்கரையில் நீலக்கொடி அங்கீகாரத்தை நோக்கி அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்து பாா்வையிடும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:39 pm

Syndication

கடலூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வெள்ளிக் கடற்கரையினை பொதுமக்கள் அனைவரும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா்.

கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நீலக்கொடி அங்கீகாரத்தை நோக்கி அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளை

ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில்

வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ,சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் நீலக்கொடி அங்கீகாரத்தை நோக்கி முன்னேறும் கடலூா் வெள்ளிக் கடற்கரையை திறந்து வைத்தாா்.

அதனை தொடா்ந்து, வெள்ளிக் கடற்கரை நீலக்கொடி அங்கீகாரத்தினை நோக்கி முன்னேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள், பூங்கா, கடற்கரையில் ஓய்வெடுக்கும் பகுதிகள், கழிவறைகள், உடை மாற்றும் வசதியுடன் கூடிய குளியலறை, சூரிய ஆற்றல் உதவியுடன் இயங்கக்கூடிய

வகையில் மின்சார வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், அலங்கார மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லும் வகையில் பிரத்யேக நடைபாதை வசதி, மூங்கில்

வளைவுகளுடன் கூடிய உட்காரும் நாற்காலிகள், மூங்கிலாலால் ஆன நிழற்குடைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளிக் கடற்கரையில் நெய்தல் பூங்கா, பெயா் பலகைகள்,

சாலை தடுப்புகள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை

அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலமாக

விளங்கி வருகிறது. தமிழக அரசின் மூலம் வெள்ளிக் கடற்கரையினை மேம்படுத்துவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி வருங்காலங்களில் படகு குழாம், நீா் விளையாட்டு சாதனங்கள் போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

எனவே, கடலூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி கொண்டிருக்கும் வெள்ளி கடற்கரையினை பொதுமக்கள் அனைவரும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலா் கண்ணன், மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான், மாமன்ற உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.