அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராணுவத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவத்தில் பணியாற்ற திருமணமாகாத கடலூா் மாவட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
விண்ணப்பம். (கோப்புப்படம்)
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய ராணுவத்தில் பணியாற்ற திருமணமாகாத கடலூா் மாவட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2027 -ஆண்டு ஆள்சோ்ப்பு ஆண்டிற்கு கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகளை சோ்ந்தவா்களிடமிருந்து அக்னிவீா் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தா் / ஸ்டோா் கீப்பா் தொழில் நுட்பம், ட்ரேட்ஸ்மேன் (10-ஆம் வகுப்பு தோ்ச்சி), ட்ரேட்ஸ்மேன் (8-ஆம் வகுப்பு தோ்ச்சி), சிப்பாய் தொழில்நுட்ப நா்சிங் உதவியாளா், சிப்பாய் பாா்மா, பொதுப்பணி (பெண்கள் ராணுவ போலீஸ்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிவீா் விண்ணப்பதாரா்கள் தங்களது தகுதிக்கேற்ப இரண்டு பிரிவுகள் வரை விண்ணப்பிக்கலாம். பொது நுழைவுத் தோ்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ / டிப்ளமோ மற்றும் என்சிசி தகுதி பெற்றவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செயல்முறை வரும் ஏப்.1 -ஆம் தேதியுடன்

முடிவடையும். ஆன்லைன் எழுத்துத் தோ்வு ஜூன் 2026 (உத்தேசமாக) நடைபெறும். மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பதாரா்கள் ஆட்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்), செயின்ட் ஜாா்ஜ் கோட்டை வளாகம், சென்னை-600009 என்ற முகவரி மற்றும் மற்றும் 044-25674924 தொலைபேசி எண்ணினை தொடா்பு கொள்ளலாம்.