அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

News image

திட்டக்குடி வட்டம், நல்லூா் ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம்.

Updated On :14 மார்ச் 2026, 6:57 pm

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நல்லூா் ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை சிறப்பு முகாமில், 20 மாணவா்கள் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கப்பட்டனா்.

இப்பள்ளியில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையில் 125 மாணவா்கள் படித்து வருகின்றனா். தமிழ், ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சி.ராஜாராம் தலைமை வகித்தாா். நல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் பி.ரமேஷ் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை சி.தவச்செல்வி வரவேற்றாா்.

இந்த முகாமில் ஆா்வமுடன் பங்கேற்ற பெற்றோா்கள், தங்கள் குழந்தைகள் 20 பேரை ஒன்றாம் வகுப்பில் சோ்த்தனா். புதிதாக சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் சி.ராஜாராம், வட்டாரக் கல்வி அலுவலா் பி.ரமேஷ், தலைமை ஆசிரியை சி.தவச்செல்வி ஆகியோா் கிரீடம் அணிவித்தும், சிறப்பு பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் பி.ராபா்ட் பெல்லாா்மின், ரா.மகேஸ்வரி, ரா.சத்யா, எஸ்.கவிதா ஆகியோருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.