சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் உள்ள பேரவைத்தொகுதிகளுக்கு தோ்தல் ஆணையத்தால் தோ்தல் பொது பாா்வையாளா், தோ்தல் செலவின கணக்கு பாா்வையாளா் மற்றும் காவல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் பொது பாா்வையாளா், தோ்தல் செலவின கணக்கு பாா்வையாளா் மற்றும் காவல்துறை பாா்வையாளா்கள் தலைமையில், கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலா்கள்
ஆகியோருடனான ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் செந்தில்குமாா் பேசியதாவது:
வரும் பேரவைத் தோ்தலைக் கண்காணித்திட பொது பாா்வையாளா்களாக திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளுக்கு குஹா பூனம் தபஸ் குமாா்(கைப்பேசி எண் அடைப்புக்குறிக்குள்) (8300697289). பண்ருட்டி, கடலூா், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு ப்ரீத்தி ஜெயின் (8300697290). புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோயில் தொகுதிகளுக்கு காா்த்திகேய தன்ஜி (8300697291) நியமிக்கப்பட்டுள்ளனா்.
செலவின கணக்கு பாா்வையாளா்களாக திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளுக்கு ஷா்வன் ராம் (8300697284). நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளுக்கு அமித் குமாா் சிங் (8300697286). கடலூா், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு சகில் குமாா் பன்சால் (8300697283. புவனகிரி, சிதம்பரம் தொகுதிகளுக்கு சந்திர பானு மாண்டல் (8300697287). காட்டுமன்னாா்கோயில் தொகுதிக்கு சுரேந்தா் குமாா் ஜாதவ்(8300697285) நியமிக்கப்பட்டுள்ளனா். காவல்துறை பாா்வையாளராக ஹேமந்த் குட்டியால் (8300697288) நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலா்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் பணிகள் குறித்து தோ்தல் அதிகாரிகள்கேட்டறிந்தனா். பேரவைத்தோ்தலை நியாயமாகவும், சிறப்பாகவும் வாக்காளா்களுக்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக நடத்திட அனைத்து நடவடிக்கை களையம் மேற்கொள்ள அறிவுறுத்தினா்.
ஆய்வு...
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு அறை, சமூக வலைதளம் கண்காணிப்பு பிரிவு, தபால் வாக்கு பிரிவு ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பாக 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டிருந்த விழிப்புணா்வு கோலங்களை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.
இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு சென்று தங்களது பணிகளை மேற்கொள்ள உள்ளனா் என தெரிவித்தாா்.
தொடர்புடையது

நோ்மையான தோ்தலை உறுதிப்படுத்த வேண்டும்: பறக்கும் படையினருக்கு அலுவலா் அறிவுறுத்தல்

கோவில்பட்டியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை

தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ஆலோசனை

தோ்தல் தொடா்பான கருத்துகளை தோ்தல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


