கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே அரசுப் பள்ளியில் சத்துணவுக்கூட கட்டடம் இடிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி காயமடைந்தாா்.
விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம், தா்மநல்லூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் சிதலமடைந்த நிலையில் இருந்த சத்துணவுக் கூடத்தை இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், குமுமூா் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (37) கட்டடத்தை இடிக்கும் பணியில் கடந்த 3-ஆம் தேதி ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கட்டட இடிபாடு விழுந்ததில் பலத்த காயமடைந்த வேல்முருகன், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்ததில் பெங்களூரு தொழிலதிபா் காயம்

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
விடியோக்கள்

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

