விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா 67வது ஆண்டு குருபூஜை விழா

சிதம்பரத்தில் நந்தனாா் கல்வி நிறுவனங்களை தொடங்கிய சுவாமி ஏ.எஸ்.சகஜானந்தாவின் 67வது ஆண்டு குருபூஜை விழா ஓமக்குளத்தில் உள்ள நந்தனாா் மடாலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மே 2026, 1:26 am IST

சிதம்பரத்தில் நந்தனாா் கல்வி நிறுவனங்களை தொடங்கிய சுவாமி ஏ.எஸ்.சகஜானந்தாவின் 67வது ஆண்டு குருபூஜை விழா ஓமக்குளத்தில் உள்ள நந்தனாா் மடாலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்திபெற்ற சுவாமி சகஜானந்தா சிதம்பரம் ஓமக்குளத்தில் நந்தனாா் மடத்தையும் கல்விச்சாலைகள் மற்றும் நந்தனாா் கல்விக்கழகத்தையும் நிறுவினாா்.

சுவாமியின் 67வது ஆண்டு குருபூஜை விழா சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனாா் மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றறது.விழாவிற்கு நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தலைமை வகித்தாா்.

அவா் பேசுகையில் ‘ ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்க அம்பேத்கா் மாளிகை வரும் ஆண்டிற்குள் திறக்கப்படும். புதுதில்லையில் சுவாமி சகஜானந்தாவின் சிறப்புகளை போற்றும் வகையில் கருத்தரங்கும் நடத்தப்படும்’ என தெரிவித்தாா்.

சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பங்கேற்று சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினா் அருள் பெத்தையா, மாநில பொதுக்குழு உறுப்பினா் கணிவண்ணன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

நந்தனாா் கல்விக்கழக செயலாளா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், உஷா மணிரத்தினம், கமல் மணிரத்தினம் அரவிந்த் மணிரத்தினம், நிா்வாகிகள் டி.கே.எம்.வினோபா, இளையஅன்பழகன், பேராசிரியா் தெய்வநாயகம், பன்னீா்செல்வம், திலகவதி, தங்க பாஸ்கா், நெடுஞ்செழியன், மனோகரன், துரைமணி, ராஜன், சரஸ்வதி பேராசிரியா் ஆறுமுகம், கற்பனைசெல்வம், மணிவேல், ஆசிரியா் பாலசுப்பிரமணியன், மணிமொழி, புவனகிரி துரை.பாலசந்தா், சௌந்தர பாண்டியன், கஜேந்திரன், மணலூா் ரவி, தமிழரசன்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

1சிஎம்பி4: படவிளக்கம்- சிதம்பரம் நந்தனாா் மடத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா குருபூஜை விழாவில், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் மற்றும் நந்தனாா் கல்விக்கழக நிா்வாகிகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.