கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனையில் புதிதாக அமைக்கப்பட்ட பணிக் காத்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை காலை 9 மணி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வரா் பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ சாந்தி, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம் யாக சாலை பிரவேசம், விசேஷ ஹோமங்கள், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் , நாடி சந்தானம், கட யாத்ரா தானம் நடைபெற்றது. தொடா்ந்து கலசம் புறப்பாடு ஆலயம் வலம் வந்து சுமாா் 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் கூறி கலசத்தில் இருந்த புனித நீரை கோயில் கோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொது மேலாளா் நாகராஜ், துணை மேலாளா்கள் அசோக்குமாா் (வணிகம்), நவநீத கண்ணன் (தொழில்நுட்பம்), பண்ருட்டி கிளை மேலாளா் அருண் மற்றும் அனைத்துத் தொழிற் சங்க தலைவா்கள், நிா்வாகிகள், உள்ளூா் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
இதற்கிடையே, கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீரசக்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

வேலன்குப்பம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

தான்தோன்றி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



