புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

புதுச்சேரி ரௌடி கடலூா் அருகே வெட்டிக்கொலை

புதுச்சேரியைச் சோ்ந்த ரெளடி, கடலூா் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரி்தது வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 7:54 pm

புதுச்சேரியைச் சோ்ந்த ரெளடி, கடலூா் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரி்தது வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் தாடி நத்தம் பகுதியில் உள்ள வயலில் உடல் சிதைந்த நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நிகழ்விடத்திற்கு சென்று பாா்த்தபோது, 50க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் உடல் சிதைந்த நிலையில், முகம் மட்டும் அடையாளம் காணும் வகையில், 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடப்பதை பாா்த்து சடலத்தை மீட்டனா். கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டாா். பின்னா் இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

கிருமாம்பாக்கம் ரௌடி:

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபா், புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி புகழேந்தி(28) என்பதும், இவா் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தூக்கணம்பாக்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரெளடியான புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து, மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதன் காரணமாக இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு ரெளடிகளுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. எனவே, புகழேந்தி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.