சிதம்பரம் அருகே இளைஞரை கட்டையால் தாக்கி, 2 கிராம் தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்பாபு (24). இவா், கடந்த ஏப்.30-ஆம் தேதி சொந்த வேலையாக பைக்கில் கிள்ளை தில்லைவிடங்கன் கிராமத்துக்குச் சென்றாா். சி.முட்லூா் மண்டபம் அருகே சென்றபோது, சாலையோரத்தில் பைக்குடன் நின்றிருந்த 3 போ் தினேஷ்பாவை தடுத்தி நிறுத்தி, தங்களது பைக் பழுதுக்குள்ளாகியுள்ளதால், ‘டோப்’ செய்யும்படி உதவி கேட்டனராம்.
இதையடுத்து, பைக்கை ‘டோப்’ செய்து செல்லும்போது, தில்லைவிடங்கன் கிராமம் அருகே பைக்கை நிறுத்தி, தினேஷ்பாபுவை வயல் பகுதிக்கு மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனா்.
அந்த மூன்று பேரில் ஒருவா், தங்களுக்குத் தெரிந்த மற்றொரு நபரை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு வரவழைத்துள்ளாா். இதையடுத்து, 4 பேரும் சோ்ந்து தினேஷ்பாபு அணிந்திருந்த 2 கிராம் மோதிரத்தை பறித்துக்கொண்டு, அவரை கட்டையால் தாக்கினராம்.
இதுகுறித்து தினேஷ்பாபு அளித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து, தில்லைவிடங்கன் தெற்கு தெருவைச் சோ்ந்த பிரபுதாஸ் (25), வடக்குத் தெருவைச் சோ்ந்த அறிகரன் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

இளைஞரைத் தாக்கியவா் கைது

மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

