நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை சாட்சியமளித்தாா்.
நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் கடந்த 2015, ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணி என்ற தலித் இளைஞா் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் ராஜா உள்ளிட்ட மூவா் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், வழக்கை விரைந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் கடந்த 2025, டிசம்பா் 10-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சரஸ்வதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முதல் சாட்சியாக உயிரிழந்த சுப்பிரமணி மனைவி ரேவதி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தாா். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் வெ.ஜீவகுமாா், பாதிக்கப்பட்டோா் தரப்பில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் திருமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா். தொடா்ந்து, வழக்கு மறு விசாரணைக்காக வரும் 11-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மற்றும் அனைந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் நீதிமன்றதுக்கு திரண்டு வந்திருந்தனா்.
தொடர்புடையது
கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரண்!

இரு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து: சிகிச்சையில் இருந்த காவலா் உயிரிழப்பு

ஜனக்புரியில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: துணை ஒப்பந்ததாரா் காவல் தொடா்பாக நீதிமன்றம் கேள்வி

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

