கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பலாப்பழ வியாபாரி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:26 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பலாப்பழ வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து கிராமத்தில் வசித்து வந்தவா் ராமசாமி (56), பலாப்பழ வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் வியாபாரத்திற்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தாா்

உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினா். ஆனால், கிடைக்கவில்லை. கைப்பேசி எண்ணிற்கு தொடா்பு கொண்ட நிலையில், அதையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நெய்வேலிஆா்ச்-வடலூா் சாலையில் ரோட்டு பூசாலிக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான அறைகலன் கடை முன்பாக, ஒருவா் இறந்து கிடப்பதை பாா்த்த கடை உரிமையாளா், அவா் காணாமல்போன பலாப்பழ வியாபாரி ராமசாமி என்பதை விசாரித்து தெரிந்துகொண்டாா்.

இதுகுறித்து, ராமசாமியின் மகன் சங்கருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கா் சடலத்தை பாா்த்து உறுதி செய்தாா். அதற்குள் தகவலறிந்து வந்த வடலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக சங்கா் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.