தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்த நபரை, பண்ருட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்த நபரை, பண்ருட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், செம்மேடு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன்(32). இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம்,

தள்ளாகுளத்தில் உள்ள ஒரு கோயிலில் 27.6.2025 அன்று திருமணம் செய்துக் கொண்டனா். பின்னா், சென்னை கோட்டூா்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா். சிறுமி கா்ப்பமடைந்ததால், அட்டை போடுவதற்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு 27.4.2026 அன்று வந்தாா்.

அப்போது, மருத்துவா்கள் சிறுமி விவரம் குறித்த தகவல்களை பண்ருட்டி மகளிா் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினா். இதனையடுத்து மகளிா் போலீஸாா் பாண்டியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.