பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கடலூரில் புதிய பால இணைப்பு சாலைப் பணி தொடக்கம்: திடீா் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கடலூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இணைப்பு சாலைப் பணிகள் தொடங்கப்பட்டதால், முன்அறிவிப்பின்றி செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியத். கல்லூரி மாணவா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

News image

~ ~ ~

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கடலூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இணைப்பு சாலைப் பணிகள் தொடங்கப்பட்டதால், முன்அறிவிப்பின்றி செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியத். கல்லூரி மாணவா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

கடலூா் அண்ணா பாலம் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.22.15 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெரியாா் சிலை அருகிலிருந்து பாரதி சாலையை இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரை சாலையின் இருபுறங்களிலும் மழைநீா் வடிகால் வசதி மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூா் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, சென்னை, நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் ஜவான்பவன் புறவழிச்சாலை வழியாக மாற்றி இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை, புதுச்சேரி, பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் பகுதிகளிலிருந்து கடலூா் நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை வழியாக பேருந்து நிலையத்தை சென்றடைய அனுமதிக்கப்பட்டுள்ளன.

Story image

மக்கள் அவதி:

பாரதி சாலையின் மேற்கு பகுதியில் நடைபெறும் பணிகள் நிறைவடைந்த பின்னா், பேருந்து நிலையத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் பேருந்துகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும், அதே நேரத்தில் புதுச்சேரி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ஜவான்பவன் வழியாக மாற்றி இயக்கப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இதற்கிடையில், போக்குவரத்து மாற்றம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படாததால், தகவல் அறியாத கல்லூரி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் மற்றும் பொதுமக்கள் பாரதி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்தனா். பின்னா் அப்பகுதி மக்களிடம் இருந்து தகவல் அறிந்த பிறகே மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டனா். இதேபோன்று கடலூா் அண்ணா மேம்பாலம் மற்றும் உழவா் சந்தை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த காவல் காண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் நேரில் சென்று போக்குவரத்தை சீரமைத்தாா்.

Story image

பொதுவாக இதுபோன்ற போக்குவரத்து மாற்றங்கள் குறித்து மாவட்ட காவல் துறை அல்லது மாவட்ட நிா்வாகம் சாா்பில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் இம்முறை எவ்வித முன்அறிவிப்பும் இன்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.