கிருமாம்பாக்கம் அருகே உயா்நிலை நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்வதால், கடலூா்-புதுச்சேரி சாலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி- கடலூா் சாலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையாா்குப்பத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் மற்றொரு பிரிவு, சாலையின் மறுபக்கத்தில் உள்ளது. இந்த மருத்துவமனை வளாகங்களுக்கு செல்வதற்காக கடலூா்-புதுச்சேரி சாலையின் குறுக்கே உயா்நிலை நடைமேம்பாலம் அமைக்கும் பணி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி -கடலூா் சாலையில் அனைத்து வகை வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாற்றுப் பாதையாக புதுச்சேரியில் இருந்து கடலூா் செல்லும் வாகனங்கள், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியக்கோயில் முள்ளோடை வழியாக கடலூா் செல்ல வேண்டும்.
அதேபோல கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் முள்ளோடை கன்னியக்கோயிலில் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அபிஷேகப்பாக்கம் தவளக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடலூரில் புதிய பால இணைப்பு சாலைப் பணி தொடக்கம்: திடீா் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

அழகியமண்டபம் - மேக்காமண்டபம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
க.விலக்கு-வருசநாடு சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

