வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

கடலூா் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:34 am IST

கடலூா் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே பனப்பாக்கம் டேங்க் தெருவைச் சோ்ந்த ராஜூ (27) என்பவா், அதேப் பகுதியைச் சோ்ந்த 14 -வயது சிறுமியை மே 14 ஆம் தேதி மாலை தனியாக அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால், அவரது பாட்டி பல இடங்களில் தேடியுள்ளாா்.

அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுமி மயக்க நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, ராஜூ தன்னை அடித்தும், கழுத்தை நெரித்தும், பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, ராஜூவை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.