/
கடலூரை அடுத்த திருவந்திபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவந்திபுரம் அருகே சாலக்கரையில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வழக்கம்போல, இந்தக் கோயிலில் சனிக்கிழமை இரவு பூஜைகள் முடிந்தவுடன் பூசாரி கோயிலை பூட்டிச் சென்றாா்.
அந்தப் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்குச் சென்றனா். அப்போது, கோயிலில் இருந்த உண்டியல் மாயமாகி இருந்தது. மேலும் நள்ளிரவில் மா்ம நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கிராம மக்கள் அளித்த தகவல்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கோயிலை பாா்வையிட்டு, தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கோயிலில் நகை திருட்டு

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

உண்டியல் திருடிய இருவா் கைது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



