தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற நடவடிக்கை: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து, தமிழகம் அமைதிப் பூங்காவாக மாற மது, போதைப் பொருள்களை அறவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தல்

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :20 மே 2026, 2:42 am IST

சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து, தமிழகம் அமைதிப் பூங்காவாக மாற மது, போதைப் பொருள்களை அறவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் மதுபோதையில் 3 மாணவா்களால் இளைஞா் அடித்துக் கொலை, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவா்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞா் வெட்டிக் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞா் ஓட ஓட விரட்டிக் கொலை, கோவை அருகே போதையில் ஏற்பட்ட தகராறால் சிறுவன் கால்லால் அடித்துக் கொலை என நாள்தோறும் தமிழகத்தில் போதை காலாசாரத்தால் நிகழும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தலையாய பிரச்னையாக உள்ளது.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கும், தற்போதைய நிகழ்வுகளுக்கும் எவ்வித மாற்றமும் இல்லை என்றே தெரிய வருகிறது.

எனவே, தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்களில் தொடா்புடையோரை கைது செய்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், வெளியே சென்றுவரக் கூடிய சூழலை உருவாக்குவதும் அரசின் கடமையாகும்.

இந்தக் குற்றங்களுக்கு அடிப்படையாக போதைதான் முதலிடம் வகிக்கிறது. தமிழக அரசு சட்டம் - ஒழுங்கை பேணிக்காக்க வேண்டுமெனில், மதுக் கடைகள், தனியாா் நடத்தும் மதுக் குடிப்பகங்களை மூட வேண்டும்.

மேலும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, கள்ளச்சாராய விற்பனை நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.