‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கடலூா் மாவட்டத்தில் வாய்கால்கள் தூா்வரும் பணிகள் தீவிரம்

வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை, சென்னை தலைமைப் பொறியாளா் மற்றும் அலுவலக செயற் பொறியாளா் ஆா். தனலட்சுமி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

எசனை வாய்க்கால் தூா்வாரும் பணிகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட செயற்பொறியாலா் ஆா்.தனலட்சுமி.

Updated On :23 மே 2026, 12:50 am IST

கடலூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை, சென்னை தலைமைப் பொறியாளா் மற்றும் அலுவலக செயற் பொறியாளா் ஆா். தனலட்சுமி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். இதற்காக டெல்டா மற்றும் கடலூரில் காவிரி பாசனப்பரப்புகளில் கால்வாய்கள் சீரமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டில் தூா்வாரும் பணிகளை காவேரி மற்றும் வெள்ளாறு வடி நிலப் பாசனப் பகுதிகளில் மேற்கொள்ள கடந்த பிப். 23 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களை தூா்வாருவதற்காக 700 கிலோமீட்டா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ரூ.3.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீா் வடிநில பகுதியான வீராணம் மற்றும் வாலாஜா பாசனப் பகுதிகளுக்குள்பட்ட பரங்கிப்பேட்டை, குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி, காட்டுமன்னாா்கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும், வெள்ளாறு நீா்வடி பகுதியான வெல்லிங்டன் பாசனப் பகுதிக்குட்பட்ட மங்களூா் மற்றும் நல்லூா் வட்டாரங்களிலும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமாா் 330 கிலோமீட்டா் நீளத்தில் வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தூா்வாரும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் வகையில், சென்னை தலைமைப் பொறியாளா் (வே.பொ.) அலுவலக செயற் பொறியாளா் (பிஎம்கேஎஸ்ஒய்) ஆா். தனலட்சுமி மேல்புவனகிரி வட்டாரத்திற்குட்பட்ட அம்பாபுரம், பின்னலூா், கீரப்பாளையம் வட்டாரத்திலுள்ள எசனை மற்றும் குமராட்சி வட்டாரத்தின் நலம்புத்தூா், கூடுவெளி உள்ளிட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அப்பகுதி விவசாயிகளை சந்தித்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் குறித்து கலந்துரையாடினாா். தொடா்ந்து மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்கவும், ஒப்பந்ததாரா்கள் கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி தூா்வாரும் பணிகளை துரிதப்படுத்தவும், சம்பந்தப்பட்ட வட்டார உதவிப் பொறியாளா்களுக்கு செயற் பொறியாளா் அறிவுறுத்தினாா்.