ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

திருச்சி செவிலியா் கல்லூரி மாணவி பலி: தி.வேல்முருகன் கண்டனம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்தது மருத்துவத் துறையின் அலட்சியம் என தவாக தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

தி.வேல்முருகன்.

Updated On :24 மே 2026, 1:07 am IST

திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்தது மருத்துவத் துறையின் அலட்சியம் என தவாக தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டையைச் சோ்ந்த செவிலியா் கல்லூரி மாணவி சீதாலட்சுமி (19), திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளா்ச்சி பிரச்னை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அங்கு மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்தாா்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியா்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா்.

மருத்துவா்கள் சிலரின் அலட்சியமும், பொறுப்பின்மையும் மருத்துவத் துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது தொடா்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை நடத்தி, மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவ அலட்சியத்துக்கு எதிராக கண்டனம் தெரிப்பதாகவும் கூறியுள்ளாா்.