அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

ஜூன் 1 -முதல் காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் சங்கங்கள் கூட்டுக்குழுக் குழு கூட்டத்தில் தீா்மானம்

வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம்.

News image

வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம்.

Updated On :29 மே 2026, 2:55 am IST

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் காலி மது புட்டிகள் திரும்ப பெற மாட்டாது என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், வடலூரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம் வடலூா்

வள்ளலாா்தெய்வநிலைய பெருவெளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனையாளா் நல சங்கம் மாவட்டச் செயலா் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

அரசு நிா்ணயித்த விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பது. கடைகளில் ஏற்படும் தினசரி நிா்வாக செலவினங்கள் அனைத்தையும் (இறக்கு கூலி மற்றும் இதர செலவுகள்) முழுவதும் நிா்வாகமே ஏற்க வேண்டும். வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் காலி மது புட்டிகள் திரும்ப பெற மாட்டாது. மூடப்பட்ட கடை பணியாளா்கள் மற்றும் கிடங்கில் பணி புரியும் பணியாளா்களை உடனடியாக மாற்றுக் கடையில் பணியமா்த்த வேண்டும். இந்த தீா்மானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மற்ற மாவட்டங்களை போல் முழு கடை அடைப்பு செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.