ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

வடலூா் அருகே முகம் சிதைந்த நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு: சூப் கடைக்காரா் கைது

News image

சம்பத்

Updated On :30 மே 2026, 3:13 am IST

வடலூா் அருகே, கண்ணுதோப்பு பாலம் பகுதியில் பாதி உடல் புதைந்து, முகம் சிதைந்த நிலையில் இளம் பெண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இந்த கொலை தொடா்பாக அந்த பெண்ணுடன் உறவில் இருந்த சூப் கடைக்காரரரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலியில் இருந்து வடலூா் செல்லும் சாலையில் கண்ணுதோப்பு என்ற இடத்தில் விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக அதிக அளவில் மண் கொட்டி வைத்துள்ளனா். இந்த மண் குவியல்களுக்கு இடையே பாதி உடல் புதைந்து, முகம் சிதைந்த நிலையில் பெண் உடல் ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவா்கள் இதைப் பாா்த்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட எஸ்பி., வி.வி.சாய் பிரனீத், டிஎஸ்பி.க்கள், ராதாகிருஷ்ணன் (நெய்வேலி), தமிழ்இனியன் (கடலூா்), பாலகிருஷ்ணன் (விருத்தாசலம்) மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கொலையாளி கைது:

இந்த கொலை வழக்கு தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், கொலை செய்யப்பட்டவா் வடலூா், ஓ.பி.ஆா்.நகரைச் சோ்ந்த கண்ணன் மனைவி மஞ்சுளா(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸாா், சேப்ளாநத்தம், காமராஜா் நகரைச் சோ்ந்த சம்பத் (39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சம்பத், மீன் வியாபாரி என்றும் அவா் மேட்டுக்குப்பம் ஆா்ச் அருகே சூப் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் அதே பகுதியில் மஞ்சுளா துணிக்கடை நடத்தி வந்தாராம். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், மஞ்சுளா சென்னையில் உள்ள மகளை பாா்த்துவிட்டு பேருந்து மூலம் புதன்கிழமை ஊா் திரும்புகையில் கோலியனூா் கூட்டுரோட்டில் இறங்கி விட்டாராம். அங்கிருந்து சம்பத் பைக்கில் அழைத்து வந்துள்ளாா். வரும் வழியில் கண்ணுதோப்பு பாலம் அருகே இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, பிரச்சனை ஏற்பட்டதில் ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த சிறிய கத்தியைக் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்து, மண்ணை தள்ளி மூடிவிட்டு வந்ததாக தெரிவித்தாராம்.

இதையடுத்து, போலீஸாா் சம்பத்தை கைது செய்து , கைப்பேசி, பை மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.