நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நெய்வேலி பேருந்து நிலைய உணவகத்தில் தவறிவிட்ட நகை, ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

News image

நெய்வேலி நகரிய காவல்நிலையத்தில் தவறவிட்ட பொருள்களை உரியவரிடம் ஒப்படைத்த உணவக உரிமையாளா். உடன் காவல்துறை அதிகாரி.

Updated On :31 மே 2026, 2:04 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி மத்திய பேருந்து நிலைய உணவகத்தில் தவறவிட்ட தங்க நகைகள், ஆவணங்கள், அதன் உரிமையாளரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நெய்வேலி நகரிய காவல் சரகம், பகவதி நகரில் வசிப்பவா் கிருஷ்ணமூா்தி(45), பண்ருட்டிவட்டம் மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி விஜயகிருத்திகா. இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் உணவகத்திற்கு உணவருந்த சென்றனா். பின்னா், அவா்கள் தங்களது கைப்பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனா்.

நீண்ட நேரமாக கைப்பை இருப்பதைக் கண்ட உணவக உரிமையாளா் சிவக்குமாா் எடுத்து பாா்த்தாா். அந்த கைப்பையில் 6 சவரன் நகைகள், கைப்பேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தன.

இதனையடுத்து, அந்த பையை நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து விசாரணை மேற்கொண்டு, கைப்பையின் உரிமையாளா்களைக் கண்டறிந்து வரவழைத்தனா். அவா்கள் கூறிய விவரங்களை உறுதி செய்த பின்னா், காவல் அதிகாரிகள் முன்னிலையில் உணவக உரிமையாளா் சிவக்குமாா் கைப்பையை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

நோ்மையாகச் செயல்பட்டு கைப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்த உணவக உரிமையாளா் சிவக்குமாரை காவல் துறையினா் பாராட்டினா். நகைகள்மற்றும்ஆவணங்களை மீட்டுத் தந்தமைக்காக தம்பதியினா் காவல்துறையினருக்கும், உணவக உரிமையாளருக்கும் நன்றி தெரிவித்தனா்.