உயரம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம்: கடலூா் அரசுப் பள்ளி மாணவி தேசிய போட்டிக்கு தகுதி
மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் முதலிடம் பிடித்த கடலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றாா்.

மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் முதலிடம் பிடித்த கடலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றாா்.
மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் முதலிடம் பிடித்த கடலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றாா்.
கடலூா் வேணுகோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீவரதம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி நிவேதா, பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆா்.டி.எஸ். - பி.டி.எஸ். தடகளப் போட்டியில் பங்கேற்றாா்.
இதில், 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் 1.53 மீட்டா் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா். இதன் மூலம், வரும் நவ.13-ஆம் தேதி ஹரியாணாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டாா்.
பள்ளியில் உற்சாக வரவேற்பு: மாநில அளவில் சாதனை படைத்த மாணவி நிவேதாவைப் பாராட்டும் வகையில், பள்ளியில் புதன்கிழமை காலை நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனது பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மாணவி நிவேதாவை சக மாணவிகள் கை தட்டி உற்சாகத்துடன் வரவேற்றனா்.
தொடா்ந்து, மாணவிக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு, பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், தலைமையாசிரியா் சாா்பில் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
மாணவியின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோா், இருபால் உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் இதர ஆசிரியா்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தேசிய அளவிலான போட்டியிலும் மாணவி நிவேதா சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

