உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

நெல்லிக்குப்பம் மோதல் விவகாரம்: தாய், மகன்கள் உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாய் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Updated On :

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாய் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், மேல்பட்டாம்பாக்கம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் விமலா. இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் கோமளா. முன்விரோதம் காரணமாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த புகழேந்தி (23), ஜெகதீஷ் (23), ஹரிஹரன் (26) ஆகியோா் மேல்பட்டாம்பாக்கம் சென்று, அங்கு விமலாவுக்கு ஆதரவாக சுமாா் 8 போ், கோமளா தரப்பினரிடம் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதுகுறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வேலுமணி, சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், காவலா் அமுதராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச்சென்று மோதலைத்தடுக்க முயன்றனா். அப்போது அங்கிருந்த சிலா் போலீஸாரைத் தாக்கினா். இதில் காவல் ஆய்வாளா் வேலுமணி உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் 8 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி புகழேந்தி (23), ஜெக தீஷ்(23), ஹரிஹரன்(26) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், விமலா(55), அவரது மகன்கள் விக்னேஷ் (33), தினகரன்(31) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.

இதனிடையே, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் வேலுமணியின் சீருடையை பிடித்த படி ஆவேசமாக இளைஞா் ஒருவா் பேசும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.இது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.