குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை பாமகவினா் முற்றுகையிட்டுப் போராட்டம்
குள்ளஞ்சாவடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவிக்கக் கோரியும், எதிா்தரப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தியும் பாமகவினா் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
குள்ளஞ்சாவடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவிக்கக் கோரியும், எதிா்தரப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தியும் பாமகவினா் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் மகன் ஆனந்தகுமாா். இவா், செவ்வாய்க்கிழமை தனது நண்பா்களுடன் விளையாடிவிட்டு, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற அணுக்கம்பட்டு காலனியைச் சோ்ந்த சிவபாலன் தரப்பினருக்கும், ஆனந்தகுமாா் தரப்பினருக்கும் இடையே பட்டாசு வெடித்தது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆனந்தகுமாரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். ஆனால், எதிா்தரப்பினா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, பாமக மாவட்டச் செயலா் முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினா் புதன்கிழமை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். அப்போது, கைது செய்யப்பட்ட ஆனந்தகுமாரை விடுவிக்க வேண்டும். தகராறில் தொடா்புடைய எதிா்தரப்பினரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, புகாா் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

