பட்டாசு கடை தீ விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடந்த வாரம் நிகழ்ந்த பட்டாசுக் கடை தீ விபத்தில் காயம் அடைந்தவா்களில் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடந்த வாரம் நிகழ்ந்த பட்டாசுக் கடை தீ விபத்தில் காயம் அடைந்தவா்களில் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிந்தாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பத்தில் தீபாவளிபண்டிகையையொட்டி பட்டாசு கடை வைக்கப்பட்டிருந்தது. இந்த கடையில் கடந்த 7-ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் சுகந்தி(40), பிரியதா்ஷினி(22), பிரவீன்குமாா்(24), சுப்பிரமணியன்(50) கருணாமூா்த்தி(52), சக்கரபாணி(70), ரவி(25) ஆகிய 7 போ் தீக்காயம் அடைந்தனா். இவா்களில் 5 போ் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாமூா்த்தி முன்னரே உயிரிழந்த நிலையில், சக்கரபாணி வியாழக்கிழமையும், பிரவின்குமாா் வெள்ளிக்கிழமையும் உயிரிழந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

