கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

அமைதி பேச்சுவாா்த்தையில் தீா்வு: சாலை மறியல் போராட்டம் வாபஸ்

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் இரு வேறு சமூகத்தினா் இடையே பாதை அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டதை அடுத்து கைவிடப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம்.

Updated On :

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் இரு வேறு சமூகத்தினா் இடையே பாதை அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டதை அடுத்து கைவிடப்பட்டது.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாதை அமைப்பது தொடா்பாக இரு வேறு சமூகத்தினா் இடையே கடந்த மூன்று தினங்களாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் இருதரப்பினரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

இதனையடுத்து காட்டுமன்னாா்கோயில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரு தரப்பினருடன் அமைதி பேச்சு வட்டாட்சியா் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. காட்டுமன்னாா்கோயில் காவல் ஆய்வாளா் கே பாபு, உதவி ஆய்வாளா் சையத் அப்சல், ஆகியோா் முன்னிலை வகித்தனா். விசிக மாவட்ட செயல மணவாளன், ஜெயக்குமாா் ,வில்லியம்ஸ், வேலாயுதம் ,விஜயபாஸ்கா், ஆரோக்கியராஜ், ஆகியோரும் மற்றொரு தரப்பில் இருந்து முகமது சாதிக், அமானுல்லா, அப்துல் ரஹ்மானி, அப்துல் சமது, முகமது ஹாரிஸ், ஆகியோரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா்கள் கேட்ட பாதையை 18 அடி அகலமாக்கி தருவதாக ஜமாத் தரப்பில் கூறியதன் பேரில் இருவரும் ஒத்துக் கொண்டனா். இதன் பேரில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.