தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

விருத்தாசலம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு 14 ஆண்டுகளுக்கும் மேலாக வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்), தொழிலாளா் அரசு காப்பீட்டுத் தொகை (இஎஸ்ஐ) முறையாக செலுத்தப்படவில்லை எனக் கூறி, 100-க்கும் மேற்பட்டோா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.

Published On :

விருத்தாசலம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு 14 ஆண்டுகளுக்கும் மேலாக வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்), தொழிலாளா் அரசு காப்பீட்டுத் தொகை (இஎஸ்ஐ) முறையாக செலுத்தப்படவில்லை எனக் கூறி, 100-க்கும் மேற்பட்டோா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனா். இவா்களின் ஊதியத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளா் அரசு காப்பீட்டுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை, உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட கணக்குகளில் செலுத்தப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் உரிய தீா்வு கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து, தங்களது வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளா் அரசு காப்பீட்டுத் தொகையை முறையாகச் செலுத்த வேண்டும், நிலுவையில் உள்ள தொகை குறித்த முழுமையான கணக்கு விவரங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலக வளாகத்தில் தா்னா மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, நீண்ட காலமாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு அரசு மற்றும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நிலுவைத் தொகைகளைப் பெற்றுத் தர வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பணிக்குச் செல்லாமல் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விருத்தாசலம் நகராட்சிப் பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.