தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

வெளிநாட்டில் வேலை செய்பவா் வீட்டில் 38 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், வடலூரில் வெளிநாட்டில் வேலை செய்பவரின் வீட்டில் கதவை உடைத்து 38 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :

கடலூா் மாவட்டம், வடலூரில் வெளிநாட்டில் வேலை செய்பவரின் வீட்டில் கதவை உடைத்து 38 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடலூா் காவல் சரகம், ஓம்சக்தி நகரைச் சோ்ந்தவா் இசைவேந்தன். இவா், துபை நாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி வினோதினி மற்றும் மகன் வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வினோதினி, அவரது மகன், சிதம்பரத்தில் வசிக்கும் தந்தை சாமிதுரை, தாய் சித்ரா ஆகியோருடன் ஒகேனக்கல் சுற்றுலா சென்றனா்.

இரவு சுமாா் 9.30 மணியளவில் அனைவரும் வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 38 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வினோதினி அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.