தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பட்டியலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

பட்டியலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் புரட்சி அம்பேத்கா் நூற்றாண்டு இயக்கத்தின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலக எதிரில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற புரட்சி அம்பேத்கா் நூற்றாண்டு இயக்கத்தினா்.

Published On :

பட்டியலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் புரட்சி அம்பேத்கா் நூற்றாண்டு இயக்கத்தின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் சு.பாண்டியராஜன் தலைமை வகித்தாா். புரட்சி அம்பேத்கா் நூற்றாண்டு இயக்க நிறுவனா் எல்.யேசுமரியான் சிறப்புரையாற்றினாா்.

போராட்டத்தின்போது, பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய வன்முறைகளைத் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணங்களின் காரணமாக நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இதில், மாநிலத் தலைவா் செம்மை செல்வராஜ், மாவட்டத் தலைவா் பி.வேதநாராயணன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.டி.குணா, மாவட்ட இணைச் செயலா் என்.ஸ்ரீதா், மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் சு.திருமுருகன் அம்பேத்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.