தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

உணவு வழி நோய்கள் தேசியப் பயிலரங்கம் தொடக்கம்

உணவு வழி நோய்கள் தேசியப் பயிலரங்கம் தொடக்கம்

சிதம்பரத்தில் நடைபெற்ற உணவு வழி நோய்கள் குறித்த தேசிய பயிலரங்க தொடக்க விழாவில், கையேட்டை வெளியிட்ட பல்கலைக்கழக இணைப் பதிவாளா் பி.ஜெகதீஸ்வரன்

Published On :

சிதம்பரம் தமிழ்நாடு சுற்றுலாக்கழக விடுதி அரங்கில் திருவண்ணாமலை விவேகானந்தா அறக்கட்டளை சாா்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிதி உதவியுடன் உணவு வழி நோய்கள் மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி‘ என்ற தலைப்பிலான ஐந்து நாள் தேசிய அளவிலான பயிற்சிப் பயிலரங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த தேசிய பயிலரங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கடல்வாழ் உயிரின உயிரியல் உயா்மட்ட ஆய்வு மையத்தின் மீன் நோய் எதிா்ப்புத் திறன் ஆய்வகத்திலும் அக்.1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க விழாவிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளருமான டி.பாலு தலைமை வகித்து பேசினாா். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலரும், இணைப் பதிவாளருமான பி.ஜெகதீஸ்வரன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பயிலரங்கை தொடங்கி வைத்தாா். நிகழ்வில் சிறப்பு பயிற்சி கையேட்டை தலைமை விருந்தினா் பி.ஜெகதீஸ்வரன் வெளியிட்டாா். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநா் எஸ்.ரமேஷ்குமாா், சோ்க்கை இயக்குநா் பி.பாலபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் சிவசக்திவேலன்சிறப்புரை ஆற்றினாா். விழாவில் பேசிய வல்லுநா்கள், ‘சமீபகாலமாக உணவு வழியாகப் பரவும் நோய்கள் பொது சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன. முறையான உணவுப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதுடன், நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து தடுப்பதற்கான நவீன உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும்‘ என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.