தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பலி

Published On :

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மந்தாரக்குப்பம் காவல் சரகம், செங்கால்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிபாரதி (21). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக்ராஜா (21). இருவரும் பண்ருட்டி அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கடந்த 2024-ஆம் ஆண்டு சோ்ந்து ஒரே ஆண்டில் கல்லூரியிருந்து விலகிவிட்டனராம்.

இந்த நிலையில், தற்போது மணிபாரதி கோவையில் உள்ள கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாமாண்டு படித்து வந்தாா். காா்த்திக்ராஜா வடலூா் அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் பைக்கில் வடலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனா். காா்த்திக்ராஜா பைக்கை ஓட்டினாா். வடலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் பைக் மீது உரசியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த மணிபாரதி, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.