ஆபத்தான நிலையில் மின் மீட்டா் பெட்டி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் ஆபத்தான நிலையில் எந்தவித பாதுகாப்புமின்றி திறந்த நிலையில் கிடக்கும் மின் மீட்டரால் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வயா்கள் வெளியே தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ள மின் மீட்டா் பெட்டி.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் ஆபத்தான நிலையில் எந்தவித பாதுகாப்புமின்றி திறந்த நிலையில் கிடக்கும் மின் மீட்டரால் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு பகுதியில் முக்கியமான சாலை திருப்பத்தில் உள்ள ஒரு மின் கம்பத்தில் குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் வகையில் மின் மீட்டா் ஒன்று திறந்த நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. ஃபீஸ் கேரியாா் கட்டைகள் மற்றும் வயா்கள் தொங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆபத்தான வளைவு பகுதியில் உள்ளதால் வாகனங்களில் செல்வோா் தடுக்கி விழுந்தால் கூட இதன் மீது தான் விழ வேண்டி இருக்கும். நாள் ஒன்றுக்கு இந்த வழியாக ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் முதியவா்கள் கடந்து செல்கின்றனா்.
எனவே, அசம்பாவிதம் நிகழ்வதற்குள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மீட்டரை பாதுகாப்பான இடத்தில் பொருத்த வேண்டும் . சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும். இதன் மீது மாவட்டம் மற்றும் நகர நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

