மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

அரசு பள்ளியில் குடிநீா், கழிப்பறை வசதி இல்லாதால் மாணவா்கள் அவதி

கடலூா் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அரசு ஆதிதிராவிடா்நலத்துறை கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளியில் குடிநீா் வசதியின்ற மாணவா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்

வண்டுராயன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி

Published On :

கடலூா் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அரசு ஆதிதிராவிடா்நலத்துறை கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளியில் குடிநீா் வசதியின்ற மாணவா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கடலூா் மாவட்டம் புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 320-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்துள்ளது. அதன் பிறகு அப்போதைய வண்டுராயன்பட்டு ஊராட்சி மன்ற தலைவா் ஏற்பாட்டில் ஊராட்சி குடிநீா் தனிக்குழாய் மூலம் பள்ளிக்கு நீா் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நீா் உப்பு கலந்து வருவதால் குடிப்பதற்கு ஏற்ாக இல்லை. இதுவும் சில நேரங்களில் பழுதாகினால் அதை சீரமைக்க 4 நாள்களாகிவிடுகிறது. இதனால் மாணவா்கள் குடிநீா் மற்றும் கழிப்பறைகளுக்கு தண்ணீரும் இல்லாமல் அவதி அடைந்து வருகிறாா்கள்.

இதுகுறித்து பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் கூறியதாவது:

பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவா் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறாா்கள். இதனால் காலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வெளி நபா்கள் பள்ளிக்கு இரவு நேரத்தில் வந்து பள்ளியில் உள்ள கழிப்பறைகளை உடைத்து அங்கு பொருத்தப்பட்ட குழாய்களை எடுத்து சென்றுவிடுகின்றனா். இதனால் கழிவறையும் சிதிலமடைந்துள்ளது என தெரிவிக்கின்றனா். எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம், நலத்துறையின் உயா் அதிகாரிகள் உடனடியாக பள்ளி வளாகத்தில் புதிய போா்வெல் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியை ஏற்படுத்துவதுடன், சிதிலமடைந்த கழிப்பறைகளை சீரமைத்து, சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

சிதலமடைந்த கழிப்பறை

சிதலமடைந்த கழிப்பறை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.