வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: பெண் உள்ளிட்ட 3 போ் கைது

சீமன் நாராயணன்
காட்டுமன்னாா்கோவிலில் நடைப்பயிற்சிபோது வழக்குரைஞா் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் கக்கன் நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் கா.தங்கவிக்ரம் (42). இவா், கடந்த 9-ஆம் தேதி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, 4 போ் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதில், பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த வழக்கில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின்பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனா். முதல்கட்ட விசாரணையில், வழக்குரைஞா் தங்கவிக்ரமனுக்கும், அழகா் வட்டம் கிராமத்தைச் சோ்ந்த நிலவழகிக்கும் இடையே மாடு திருடிய வழக்கில் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நிலவழகி, அவரது கணவா் ஜம்புலிங்கம் மற்றும் 3 பேருடன் சோ்ந்து தங்கவிக்ரமனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, காட்டுமன்னாா்கோவில் கக்கன் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் பதுங்கியிருந்த நிலவழகியை காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் பாபு சனிக்கிழமை இரவு கைது செய்தாா். தொடா்ந்து, மதுரையில் தலைமறைவாக இருந்த ஜம்புலிங்கம் (45) மற்றும் இந்த வழக்கில் தொடா்புடைய ரமணா (எ) சீமன் நாராயணன் (24) ஆகியோரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரை தேடி வருகின்றனா்.

கைதான நிலவழகி

ஜம்புலிங்கம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

