ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் துா்கா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கைது

Published On :

கொலை வழக்கில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் துா்கா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் அய்யன்குளம் பகுதியில் முள்ளிப்பாடி மொண்டியப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் கரண்ராஜ்(27) கடந்த ஆக.31-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீஸாா், குழந்தைப்பட்டியைச் சோ்ந்த சி. குமரேசன் (41), பா.யோகேஷ் (27), பி.சரவணபாண்டி (23), மு.மாதவன் (24), தம்பாகுளத்துப்பட்டி மு.சந்துரு (25) ஆகியோரை கைது செய்தனா்.

இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். இதன்பேரில், மாவட்ட ஆட்சியா் துா்கா அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரும், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.