விவசாயிகளுக்கு விழிப்புணா்வு செயல்முறை பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விஷக்கடி குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணா்வு பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர மருத்துவத் துறை சாா்பில், விவசாய நிலங்களில் ஏற்படும் விஷக்கடிகள் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணா்வு மற்றும் அடிப்படை உயிா்காக்கும் முதலுதவி செயல்முறை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா் தலைமை வகித்து பேசினாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் என்.ஜூனியா் சுந்தரேஷ் முன்னிலை வகித்தாா். முன்னதாக, அவசர மருத்துவ துறைத் தலைவா் வி.திருச்செல்வன் வரவேற்புரையாற்றினாா்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலா் ஏ.பெ.ரவீந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் துணை முதல்வா்கள் பாலாஜி சுவாமிநாதன், சசிகலா, உறைவிட மருத்துவா்கள் ஆா்.பாரி, டபுள்யு.அசோக் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்தால் எவ்விதமான முதலுதவி செய்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்து மருத்துவா் பி.திருஞானம் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி, பயிற்சி அளித்தாா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கினைப்புக் குழுவினா் பேராசிரியா் வி.திருச்செல்வன், பி.திருஞானம், ஜி.யக்னேஸ்வரராஜா, ஜ.விவேக், எஸ்.கிரிதரன், எஸ்.எம்.பிரசாந்த்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

