137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தேவனாம்பட்டினம் வந்த ஹோவா் கிராஃப்ட் படகுகள்: தற்படம் எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

கடலூா், தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சனிக்கிழமை வந்த ஹோவா் கிராஃப்ட் படகு.

Updated On :

கடலூா், தேவனாம்பட்டினம்,வெள்ளிக்கடற்கரைக்கு இந்தியக் கடலோரக் காவல் படையின் இரண்டு ஹோவா் கிராஃப்ட் ரோந்துப் படகுகள் சனிக்கிழமை காலை அடுத்தடுத்து வந்து நின்றன. அவற்றைப் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு, படகுகள் முன்பு நின்றுகொண்டு தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

ஹோவா் கிராஃப்ட் படகு என்பது நிலத்திலும் நீரிலும் செல்லக்கூடிய படகு ஆகும். கடலோர ரோந்து மற்றும் மீட்புப்பணிகளுக்காக இந்த ஹோவா் கிராஃப்ட் படகுகளை கடலோரக் காவல்படை பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காரைக்காலில் இருந்து வந்த இரண்டு ஹோவா்கிராஃப்ட் படகுகள் தேவனாம் பட்டினம் வெள்ளிக்கடற்கரை பகுதியில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்தப்படகுகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. தலா 20 மீட்டா் நீளமும், 30 டன் எடையும் கொண்ட இந்தப் படகுகள் மணிக்கு 45 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்தப்படகுகளை பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஏராளமானோா் படகுகளைப் பாா்வையிட்டு, கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம், படகின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். மேலும், படகுகளுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.