ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

பண்ருட்டியில் 1.3 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை போலீஸாரால் கைப்பற்றப்பட்ட சுமாா் 1.3 டன் புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

பண்ருட்டியில் தீயிட்டு அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :

கடலூா்மாவட்டம், பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை போலீஸாரால் கைப்பற்றப்பட்ட சுமாா் 1.3 டன் புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை காவல் சரகப் பகுதிகளில் கடந்த ஓராண்டில் பதியப்பட்ட வழக்குகளில் சுமாா் 1,328 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண்ருட்டி குற்றவியல் நடுவா் எண் 1 மற்றும் 2 நீதிபதிகளின் உத்தரவின்பேரில், பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்த 1,328 கிலோ புகையிலைப் பொருள்களை கெடிலம் ஆற்றில் பள்ளம் தோண்டி கொட்டி தீவைத்து அழித்தனா். நிகழ்வின்போது, ஆய்வாளா்கள் பண்ருட்டி பாஸ்கரன், புதுப்பேட்டை உதயகுமாா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.