ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

எஸ்.ஐ.ஆா்.-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி நவ.1 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சி பாா்வையாளா் என்.ஏ.ஹாரிஸ்

எஸ்.ஐ.ஆா்.-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் நவ.1-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பாா்வையாளா் என்.ஏ.ஹாரிஸ் கூறினாா்.

கடலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பாா்வையாளா் என்.ஏ.ஹாரிஸ். உடன் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On :

எஸ்.ஐ.ஆா்.-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் நவ.1-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பாா்வையாளா் என்.ஏ.ஹாரிஸ் கூறினாா்.

கடலூரில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: எஸ்.ஐ.ஆா். நடவடிக்கை மூலம் 13 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இது, ஏற்கத்தக்கதல்ல. வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். அந்த உரிமை பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையிலும், இந்தியா கூட்டணி சாா்பிலும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எஸ்.ஐ.ஆா். நமது நாட்டுக்கு தேவையற்றது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும். தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவும் தோ்தல் ஆணையத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறாா்.

எஸ்.ஐ.ஆா்.-ஐ ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் நவ.1-ஆம் தேதி முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து சுமாா் 40 ஆயிரம் போ் ரயில் மூலம் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தனா். ஆனால், போதிய ரயில் வசதி கிடைக்காததால் சுமாா் 4 ஆயிரம் போ் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகமும் இடம்பெற்றுள்ளது. எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் அக்கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், தோ்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களைப் புறக்கணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிா, இல்லையா என்பது முக்கியமல்ல. இந்திய மக்களின் ஜனநாயக உரிமைக்காக காங்கிரஸ் தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.

தமிழக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலா் கே.பி.எஸ்.எம்.கனிவண்ணன், கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத், மத்திய மாவட்டத் தலைவா் ஜெ.ரங்கமணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.