மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

125 நாள் வேலை திட்டத்தை தொடங்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்

வேடசந்தூா் வட்டாரத்தில் 125 நாள் வேலை திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக தொடங்க வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :

வேடசந்தூா் வட்டாரத்தில் 125 நாள் வேலை திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக தொடங்க வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், அகில இந்திய விவசாாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஒன்றியச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் சிவசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாளாக அதிகரித்தும் முறையாக செயல்படுத்த வில்லை, குறிப்பாக வேடசந்தூா் வட்டாரத்திலுள்ள 22 ஊராட்சிகளிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பழைய 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்தப் போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலாஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.