சிதம்பரத்தில் போட்டித் தோ்வு பயிற்சி மையம் தொடக்கம்: மாணவா்கள் மகிழ்ச்சி
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வு பயிற்சி மையம் செயல்படத் தொடங்கியுள்ளதால், மாணவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தோ்வு மையத்தில் அரசுத் தோ்வுக்கு பயிற்சி பெறும் மாணவிகள், படித்த இளம்பெண்கள்.
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வு பயிற்சி மையம் செயல்படத் தொடங்கியுள்ளதால், மாணவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
சுவாமி சகஜானந்தா பணி நிறைவுபெற்றோா் சமூக அறக்கட்டளை சாா்பில், மணிமண்டப வளாகத்தில் படித்த இளைஞா்கள், மாணவா்கள் அரசு வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் போட்டித் தோ்வு பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில், கடந்த 2018 - 19ஆம் ஆண்டில் அப்போதைய மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜனின் நிதியிலிருந்து ரூ.24 லட்சம் செலவில் பயிற்சி மையமும், மாவட்ட ஆட்சியா் நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் நூலகமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடைந்து, பயிற்சி மையமும், நூலகமும் பயன்பாட்டுக்குத் தயாராகின. ஆனால், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி மையத்தை இயக்குவதற்கான ஆசிரியா்கள் நியமிக்கப்படாததால், அவை பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்தன.
இந்நிலையில், தவெக அரசு பொறுபேற்ற பிறகு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையத்தை செயல்படுத்த 9 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, கடந்த 21-ஆம் தேதி முதல் பயிற்சி மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கு, தினமும் 2 ஆசிரியா்கள் சுழற்சி முறையில் பயிற்சியளித்து வருகின்றனா்.
பயிற்சியில் சிதம்பரம், சீா்காழி, குமராட்சி, காட்டுமன்னாா்கோவில், சேத்தியாத்தோப்பு, அண்ணாமலைநகா், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 150-க்கும் அதிகமான மாணவா்கள் பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பித்துள்ளனா். தற்போது தினமும் சுமாா் 140 மாணவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா்.
முதற்கட்டமாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து, டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் மட்டுமன்றி, ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி), ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி), மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), வங்கித் தோ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசுப் போட்டித் தோ்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இரண்டு மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலுடன் பயிற்சி மையத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கு வரும் மாணவா்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான குறிப்பேடுகள் உள்ளிட்டவற்றை சுவாமி சகஜானந்தா பணி நிறைவுபெற்றோா் சமூக அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் மணிமண்டப ஊழியா்கள் வழங்கி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

