நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அண்ணாமலைப் பல்கலை.யில் திறன்மிகு வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுமானம் மற்றும் கட்டடவியல் துறையில் 1979 - 84ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில், ரூ.7.55 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட திறன்மிகு (ஸ்மாா்ட்) வகுப்பறை மாணவா்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் ரூ.7.55 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறையை மாணவா்களுக்கு அா்ப்பணித்த முன்னாள் மாணவா்கள்.

Published On :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுமானம் மற்றும் கட்டடவியல் துறையில் 1979 - 84ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில், ரூ.7.55 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட திறன்மிகு (ஸ்மாா்ட்) வகுப்பறை மாணவா்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் நடைபெற்ற விழாவில் கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி வரவேற்றாா். பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உறவுகள் மையத்தின் இயக்குநா் மற்றும் மின் பொறியியல் துறைத் தலைவா் எஸ்.கணபதி தலைமை வகித்தாா்.

விழாவில் முன்னாள் மாணவா்கள் பொறியாளா்கள் ஏ.குமாா், ஏ.ஆா்.ராகவன், ஏ.முருகானந்தம், ஹிலால்அஹமது, வி.எம்.மாறன் ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா். முன்னாள் கட்டடவியல் துறைத் தலைவா் வி.கனகசபை வாழ்த்துரை வழங்கினாா். பொறியாளா் பி.செந்தில்நாதன் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

மேலும், விழாவில் திறன்மிகு வகுப்பறைக்கு சுமாா் ரூ.65 ஆயிரம் மதிப்பிலான ஒலி, ஒளி அமைப்புகளை 1984 - 88 பயின்ற பொறியியல் புல முன்னாள் மாணவா்கள் வழங்கினா். விழாவில் பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.பாலக்குமாா், டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா், எஸ்.சிவப்பிரகாசம் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ஜி.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.